காரைக்குடியில் தீபாவளி கூட்ட நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு.
यहाँ देखें:
▶️ YouTube
காரைக்குடியில் பழைய பஸ் ஸ்டாண்ட் தொடங்கி செக்காலை ரோடு, ஐந்து விளக்கு உட்பட்ட பகுதியில் அதிமான மக்கள் கூட்ட நெரிசல்.
காரைக்குடி நகர் முக்கியமான வீதிகளில் சாலையோரக்கடைகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பொதுமக்கள் ஆடைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் போக்குவரத்து தடைபடுகிறது. எனவே போக்குவரத்து பாதையில் தற்காலிகமாக மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.