🔥 TRENDING ರಕ್ಷಣೆಗಾಗಿ 1098 ಗೆ ಕರೆ ಮಾಡಿ रायबरेली में लगेगा सरस मेला महिला समूह... ఆదిలాబాద్ కలెక్టర్ చొరవతో ఉచిత ఓపెన్ హ... ધાંગધ્રા આયૅ સમાજમાં રાષ્ટ્રીય એકતા દિ... ఆదిలాబాద్: సోదరి విమర్శలు.. సోదరుడి సభ... મોડાસામાં સરદાર વલ્લભભાઈ પટેલની 151મી...
31 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்!

✍️ Reporter: A RAM PRABHU 🗓 31 Oct 2026, 04:49 PM 👁 21
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் கிராம ஊராட்சிகளிலும் நாளை 01-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தைத் தவறாமல் நடத்திட வேண்டும் என அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள்:
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்த விவாதம்.
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை.
மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல்.
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
தமிழ்நாடு கிராம மேம்பாடு மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு (TN-VETRI).
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.
பல்வுயிர் மேலாண்மைக் குழுக்கள் (BMCs) குறித்த விவாதம்.
இழிவுதரும் சாதிப் பெயர்களை மாற்றம் செய்தல்.
வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல்.
தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல்.
சபாசார் வலைத்தளம் (SabhaSaar Portal) தொடர்பான விவாதம்.
கிராம செழுமை மீட்சித் திட்டம் (VPRP).
பொதுச் சொத்துக்கள், சேவைகள் மற்றும் வள மேம்பாட்டுத் திட்டம்.
சமூக மேம்பாட்டுத் திட்டம்.
பண்ணை மற்றும் பண்ணை சாரா செயல்பாடுகள்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தொடர்பான விவாதம்.
ஊராட்சி அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஒருங்கிணைப்பு.
தன்னார்வ ஊராட்சியாளர் திறன் பயிற்சித் திட்டம்.
வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம்.
மழைநீர் சேகரிப்பு.
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம்.
இதர பொருட்கள்.
மேலும், இக்கிராம சபைக் கூட்டங்களில் அனைத்துத் துறை உயர் அலுவலர்களும் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளவும், கூட்டம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் மற்றும் சிறப்பு மேற்பார்வையாளர்களை நியமனம் செய்யவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று, கிராம வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான தங்களது கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் புகார்களைத் தெரிவித்து பயன்பெறலாம்.
📲Get App