🔥 TRENDING શહેરા તાલુકાના ડિંડોર અશ્વિનકુમારે 150... IMD Warns of Showers and Thunderstorms... IMD Forecasts Continued Rainfall Acros... Fire tender seen at Gujarat MLA's bung... Fact Check: Old Video Misrepresented a... Anand Mahindra's Rickshaw Video on UK...
07 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம்.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 07 Oct 2026, 07:04 AM 👁 9
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ஓமலுார்:காடையாம்பட்டி தாலுகா, கஞ்நாயக்கன்பட்டி ஊராட்சியில் கடந்த, 6 மாதத்துக்கு முன்பு பணியில் ஈடுபட்ட வி.பி.ராம்ஜி (100 நாள் திட்ட) தொழிலாளர்கள், 20 பேர் நேற்று காலை, கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியை முற்றுகையிட்டனர்.அங்கு வந்த ஊராட்சி செயலர் ஜெயவேலுவிடம், ஏரி வேலை திட்டத்துக்கு ஒருநாள் கூலியாக, 345 ரூபாய் என அரசு நிர்ணயம் செய்த நிலையில், ஒரு சில நாட்கள், 120 ரூபாய் மற்றும் 70 ரூபாய் என கூலியாக வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளீர்கள் என, பெண்கள் அனைவரும் கேள்வி கேட்டனர். மேலும் பணித்தள பொறுப்பாளர் முறையாக பதில் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர். அதற்கு ஊராட்சி செயலர் ஜெயவேல், ''நான் பணியிட மாறுதலாகி வந்து, 15 நாட்களாகிறது. அப்போது ஊராட்சியில் நிதி குறைவாக இருந்ததால், கூலி குறைவாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பி.டி.ஓ.,அலுவலகத்தில் தெரிவித்து, உரிய கூலித்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
📲Get App