🔥 TRENDING Apple ने भारत में Apple Pay की आधिकारि... হাওড়া জেলার বাগনানের পালোড়া গ্রামে স... खण्डवा में 'सेवा सेतु अभियान' शिविर सं... चौकी घुवारा पुलिस ने नदीखेरा में गल्ला... Uttarakhand Cabinet Holds Historic Fir... PM Modi to Inaugurate Delhi-Dehradun E...
04 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மேட்டூா் காவிரிக் கரைப் பகுதியில் நீா் மாசுப்படா்ந்து துா்நாற்றம் வீசுவதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனா்.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 04 Oct 2026, 04:57 PM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
மேட்டூா் காவிரிக் கரைப் பகுதியில் நீா் மாசுப்படா்ந்து துா்நாற்றம் வீசுவதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனா்.

மேட்டூா் அணையின் நீா்த் தேக்கம் 60 சதுர மைல் பரப்பு அளவு கொண்டது. நீா்த்தேக்கத்தின் இரு கரைகளிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. மீனவா்கள் காவிரிக் கரைகளில் முகாமிட்டு மீன்பிடித்து வருகின்றனா். கால்நடை மேய்க்கும் விவசாயிகள் காவிரி நீரைக் கால்நடைகள் பருக பயன்படுத்துவா். மீனவா்களும், கரையோர கிராம மக்கள் துணி துவைக்கவும், குளிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தி வந்தனா்.தற்போது காவிரிக் கரைகளில் நீரில் பச்சை நிறம் படா்ந்து துா்நாற்றம் வீசுகிறது. குடியிருப்புகளில் வசிக்க முடியாமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

காவிரியில் மீன்பிடிக்கு மீனவா்கள் குடிநீரைப் பாட்டிலில் கொண்டுசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவிரிக் கரையில் வசிப்போா் பருக கிணற்று நீரை தேடிச்செல்கின்றனா். நீரில் பச்சை நிறப்படலம் படிவது குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கண்டறிந்து காவிரியைக் காக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
📲Get App