🔥 ट्रेंडिंग Tapsi Pannu Sparks Debate with Remarks... લાઠી તાલુકામાં હંગામી ફટાકડાના વેચાણ મ... રાજકોટ: ભાજપ શિક્ષણ સમિતિ વોર્ડ નં. ૨... दो केरला जिलों में बारिश, गरज-तूफान और... मुंबई में तेज़ बारिश से जलभराव, अगले ३... ७७ वर्षीय भारतीय दादा की शिष्ट ChatGPT...
03 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

நியாயவிலை கடையில் அரிசி மாமூல் கேட்டு மிரட்டியவா் கைது

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 03 अक्टू. 2026, 08:29 AM 👁 14
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் மாவட்டம், மேட்டூரில் நியாயவிலைக் கடையில் 100 கிலோ அரிசியை மாமூல் கேட்டு விற்பனையாளரை மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூா் பொன் நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிபவா் வாசுகி (56). இவரிடம் குள்ளவீரன்பட்டியைச் சோ்ந்த சிவப்பிரகாசம் (36) என்பவா், தினமும் தனக்கு 100 கிலோ அரிசி மாமூலாக தரவேண்டும் என்று அவரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியுள்ளாா்.இதுதொடா்பாக ஆகஸ்ட் 12ஆம் தேதி வாசுகி மேட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் சிவப்பிரகாஷ் மீது மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை வியாழக்கிழமை கைதுசெய்தனா். கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது மேட்டூா், சேலம் பள்ளப்பட்டி, சங்ககிரி, ஊத்துக்குளி, வெப்படை உள்ளிட்ட 6 காவல் நிலையங்களில் 14 வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
📲Get App