🔥 ट्रेंडिंग खोर्डा में एनएच-16 पर ट्रक‑ट्रेलर टक्क... विरासत के रूप में सराहा गया एक स्मारक... अंध्र प्रदेश बनता है स्वच्छ ऊर्जा तकनी... एपी ईएएमसीईटी 2026 राउंड 3 सीट अलॉटमें... कोस्टल आंध्र प्रदेश में भारी बारिश की... आमदार किसनजी कथोरे यांच्या हस्ते 'विका...
20 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

உதவித்தொகை பெறுவதில் சிரமப்படும் முதியோர்கள்

✍️ रिपोर्टर: A RAM PRABHU 🗓 20 सित. 2026, 11:16 AM 👁 23
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

நலம் கருதி அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாட்டில் முதியோர் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினருக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்ளிட்ட12 வகையான திட்டங்களின் கீழ் லட்சக்கணக்கான பேர் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் பயன்பெறும் சுமார் 20 லட்சம் முதியோர் மற்றும் பிற பயனாளிகளுக்கு இம்மாதத்திற்கான தொகை வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மாதாந்திர உதவித்தொகையை நம்பியுள்ள முதியோர் கவலைக்குள்ளாகினர். அதேவேளை, முழுமையாக மாநில அரசின் திட்டங்களின் கீழ் உள்ள மற்ற பயனாளிகளுக்கு தொகை உரிய நேரத்தில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இம்மாதம் முதியவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை கடந்த 14 ந்தேதி அன்று ஆதார் கார்டு வழியாக வங்கி கணக்கிற்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக பெற்ற வங்கி கணக்கிற்கு வராமல் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டது. இதனால் முதியவர்கள் வழக்கம்போல உதவித்தொகை பெறமுடியாமல், எந்த கணக்கில் உதவித்தொகை வந்துள்ளது என தெரியாமல் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கைரேகை சரியாக பதிவாகாமல் சிரமப்பட்டு வந்த நிலையில் தற்போது எந்த கணக்கில் வந்துள்ளது என தெரியாமல் கடும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
முதியவர்களுக்கு உதவித்தொகை பெற சிரமம் இல்லாமல் வீட்டிலேயே கிடைக்க வங்கி தொடர்பாளர்களை அரசு நியமனம் செய்து சிரமம் இன்றி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
📲Get App