🔥 TRENDING Two Killed in Road Accident, Toddler E... अंबिकापुर मेडिकल कॉलेज में मौत पर मचे... 29 घंटे बाद शव मिला Sharad Pawar Highlights Delimitation B... Rahul Gandhi Urges Youth to Oust BJP,... श्री गंगा ढाबा में घुसा बेकाबू कैंटर,...
29 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

புதுச்சேரி காவல்துறை சைக்கிள் பேரணி: உடல் ஆரோக்கியம், போதை எதிர்ப்பு விழிப்புணர்வு

✍️ Reporter: Sudhakaran 🗓 29 Nov 2026, 10:05 AM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

புதுச்சேரி காவல்துறை மற்றும் பிஃட் இந்தியா மிஷின் சார்பில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் சைக்கிளில் நகரம் முழுவதும் சென்று உடல் ஆரோக்கியம் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதுச்சேரி காவல்துறை மற்றும் பிஃட் இந்தியா மிஷின் சார்பில் உடல் ஆரோக்கியம் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், டிஐஜி சத்திய சுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட போலீசார் நகர பகுதிகளில் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.

முன்னதாக மாணவர்களின் யோகா, சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடத்ந்து போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் படிக்க, அதனை அனைவரும் ஏற்று கொண்டனர்.

நிகழ்ச்சியில் தலைமை செயலர் சரத் சவுகான், டிஜிபி ஶாலினி சிங், காவல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
📲Get App