🔥 TRENDING SGCCI એ સુરતના ટેક્સટાઇલ ઉદ્યોગમાં ₹20... Delhi to Launch Skill Centre with Crec... Delhi Chicken Shop Targeted in Revenge... સુરત જિલ્લામાં બે મૃતદેહ મળી, જુગાર રમ... Bhilwara House Attacked After Sand Min... સુરતના પલસાણા તાલુકામાં નહેરમાં મળેલી...
24 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ஊருக்குள் நுழைய தடை

✍️ Reporter: Sudhakaran 🗓 24 Nov 2026, 10:30 PM 👁 10
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மூன்று ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய தடை

புதுவையில் மூன்று ரவுடிகள்
ஊருக்குள் நுழைய தடை

புதுச்சேரி, நவ 24-&
புதுவை கரிக்கலாம்பாக்கம் அரசன்குளம் வீதி மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஐய்யனார் (எ) தாடி ஐய்யனார் (எ) ராஜதுரை (வயது 30) இவர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் 4 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள், 3 அடிதடி வழக்குகள், கஞ்சா மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.
இவரால் அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவரை ஊருக்குள் நுழைய தடை விதிக்குமாறு கரிக்கலாம்பாக்கம் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதேபோல் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கரிக்கலாம்பாக்கம் குளத்துமேடு தெருவை சேர்ந்தவர் சேகரின் மகன் விநாயகம் (எ) விநாயகமூர்த்தி (வயது 36) கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகநாதனின் மகன் வாஞசிநாதன் (வயது 37) ஆகியோரும் ஊருக்குள் நுழைய தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்பேரில் தாடி அய்யனார், விநாயகம், வாஞ்சிநாதன் ஆகிய 3 பேரும் 2 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிடப் பட்டுள்ளது.
📲Get App