🔥 TRENDING Congress Stands United, No Factionalis... 35-year-old Punjabi man murdered in US... Rajasthan BJP Turmoil After Panchayat... कलेक्टर राहुल नामदेव धोटे ने मंडला पॉल... बीदर में संविधान समर्पण दिवस पर साहित्... उत्तर मध्य रेलवे में पहली पहल, झांसी म...
23 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இலவச வீடு, பாதை சீரமைப்பு, குடிநீர் வசதி கோரிக்கை மனு

✍️ Reporter: Siva 🗓 23 Nov 2026, 06:45 PM 👁 23
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

விருதுநகர் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா, இலவச வீடு, மயானப் பாதை சீரமைப்பு மற்றும் குடிநீர் வசதி மேம்பாடு கோரிக்கை மனு அளித்தனர்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் 2023 நவம்பர் 23 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா, இலவச வீடு வழங்குதல், மயானப் பாதை மற்றும் குடிநீர் வசதிகளைச் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில், மயானத்திற்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள குளியல் தொட்டி மற்றும் கழிவுநீர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீக்குதல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு அடிப்படை கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சுழி – நரிக்குடி ஒன்றியச் செயலாளர் தோழர் செல்வம் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, விருதுநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், தோழர்கள் ராமச்சந்திரன், மணிமாறன், சரத்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர்.

இந்திரா நகர் பொதுமக்களின் நீண்டகால அடிப்படை பிரச்சினைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
📲Get App