காரைக்குடி வித்தியாகிரி பள்ளி மாணவன் சாந்த சீலனின் சாதனை.
சிவகங்கை அருகே நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டு, காரைக்குடி மாணவன் சாந்த சீலன் முதலிடத்தை பிடித்து மாநில அளவில் கலந்து கொண்ட தகுதி பெற்றுள்ளார்.
காரைக்குடி வித்யாகிரி பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் சாந்த சீலன் மாவட்ட அளவில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை பெற்றார். மேலும் இவர் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இவரை பள்ளி முதல்வர் ஹேமா மாலினி சுவாமிநாதன் பாராட்டி வாழ்த்தினார்.