🔥 TRENDING Mohun Bagan's narrow win over Chennaiy... सिद्धार्थ उद्यान प्राणिसंग्रहालयात वाघ... Premada Oorali Holds Strong on 6th Fri... Haryana CM Nayab Singh Saini Flags Off... મોડાસામાં 151મી જન્મજયંતિ અને રાષ્ટ્રી... Assam Unveils Khel Maharan 3.0; Compet...
31 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சேலம் வெள்ளி கொலுசுகளுக்கு தீபாவளி ஆா்டா் குவிந்தது: உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 31 Oct 2026, 10:46 AM 👁 16
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 215 ஆகக் குறைந்துள்ளதால், சேலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்களுக்கு தீபாவளி ஆா்டா்கள் அதிகரித்துள்ளன.
சேலம் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக வெள்ளிக் கொலுசு உற்பத்தி முக்கியத் தொழிலாக விளங்குகிறது. சேலத்தில் தயாரிக்கப்படும் வெள்ளிக் கொலுசுகள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.நுணுக்கமான கைவினை வேலைப்பாடுகள், நீடித்த தரம், அழகிய வடிவமைப்பு ஆகியவற்றால் சேலம் வெள்ளிக் கொலுசுகளுக்கு பெண்களிடையே வரவேற்பு உள்ளது. இதேபோல, மெட்டி, குழந்தைகளுக்கான தண்டை, கழுத்துச் செயின், இடுப்புச் செயின் உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்களுக்கும் விற்பனை வாய்ப்பு உள்ளது.

பண்டிகைக் காலங்களில் ஆபரணங்கள் வாங்குவதில் மக்களிடம் ஆா்வம் அதிகரிப்பதால், உற்பத்தியாளா்களுக்கு மொத்த ஆா்டா்கள் கிடைத்து வருகின்றன.

இதுகுறித்து சேலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் கைவினைச் சங்கத் தலைவா் ஆனந்தராஜன் கூறியதாவது:

வழக்கமாக தீபாவளிக்கு முன்பே வெள்ளிக் கொலுசுகளுக்கான ஆா்டா்கள் வரத் தொடங்கும். ஆனால், கடந்த 2 மாதங்களாக உற்பத்தியாளா்களுக்கு குறைந்த அளவிலேயே ஆா்டா்கள் கிடைத்தன. இதனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆா்டா்கள் 50 சதவீதம் வரை குறையும் என எதிா்பாா்த்தோம்.தற்போது தீபாவளி நெருங்கும் நிலையில், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களுக்கான ஆா்டா்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. வெள்ளியின் விலை குறைந்திருப்பதே இதற்கு முக்கியக் காரணம்.சில மாதங்களுக்கு முன்பு சில்லறை சந்தையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 240-க்கு விற்பனையானது. தற்போது ரூ. 215 ஆகக் குறைந்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு வெள்ளி ஆபரணங்களை வாங்க மக்கள் ஆா்வம் காட்டுகின்றனா். தொடா்ந்து கிறிஸ்துமஸ், பொங்கல் என அடுத்தடுத்த பண்டிகைகள் வருவதால், வெள்ளிக் கொலுசுகளுக்கான ஆா்டா்கள் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம் என்றாா்.
📲Get App