🔥 TRENDING સુરેન્દ્રનગરમાં PGVCLની 31 ટીમોએ 8 ગામ... હિંમતનગરમાં અષ્ટસિદ્ધિ માનસ હનુમાન દાદ... मत वाचवा देश वाचवा संविधान वाचवा लोकशा... સાબરમતી રિવરફ્રન્ટ પર 25 કરોડના ડ્રગ ક... उड़ान झारखंड ने मेदिनीनगर में टी‑20 क्... अंबिकापुर में सुसीमा ट्रॉफी शतरंज प्रत...
27 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

விபத்து

✍️ Reporter: Sudhakaran 🗓 27 Oct 2026, 07:15 AM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அதிர்ஷ்டவசமாக சிறுவன் உட்பட மூவர் உயிர் தப்பினர்

*_பாகூரில் வாய்க்காலில் கவிழ்ந்த கார்! 4 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிர் தப்பினர்!_*

புதுச்சேரி பாகூர்–கன்னிக்கோயில் சாலையில், எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சரண், மனோஜ் உள்ளிட்ட ஐந்து பேர் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றுவிட்டுச் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாகூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் கிருமாம்பாக்கம் போக்குவரத்துக் காவல்துறையினர், வாய்க்காலில் கவிழ்ந்த காரைப் பாதுகாப்பாக அகற்றினர். இந்த விபத்தில் 4 வயது குழந்தை உட்பட காரில் இருந்த ஐந்து பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்தச் சாலையில் மீண்டும் விபத்துகள் நிகழாமல் தடுக்க, வாய்க்கால் பகுதியில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📲Get App