🔥 TRENDING Ravi ने एक व्यक्ति को मारने की धमकी दी... Drishyam Franchise Surpasses Housefull... Udta Teer Starrer Ayushmann Khurrana’s... CJP Leaders Das and Ranka to Appear Be... Punjab Showcases Canned Chole and Rajm... Punjab Police Dismantle Drug & Arms Sm...
19 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

பொன்னி அரிசி என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்? சேலத்தில் அரிசியைத் திருப்பிக் கொடுத்த பொதுமக்கள்!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 19 Oct 2026, 01:15 PM 👁 9
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

பொன்னி அரிசி என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்? சேலத்தில் அரிசியைத் திருப்பிக் கொடுத்த பொதுமக்கள்!

தமிழகத்தில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு அங்காடிகளில் கிலோ 30 ரூபாய்க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பொன்னி கூட்டுறவு அங்காடியில் அரிசி விற்பனை தொடங்கப்பட்டது.
ஆனால், பணம் கொடுத்து அரிசியை வாங்கிய பொதுமக்கள், அந்த அரிசி ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைப் போன்று இருப்பதாகக் கூறி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், இலவசமாகக் கிடைக்கும் அரிசியைப் போன்ற அரிசியை 30 ரூபாய் கொடுத்து ஏன் வாங்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய சிலர், வாங்கிய அரிசியைத் திருப்பிக் கொடுத்து பணத்தைத் திரும்பக் கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரசு அறிவித்த சன்னரக அரிசியின் தரம் என்ன? பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அதே நேரத்தில், அரிசி தரம் குறித்த பொதுமக்களின் புகாரை அதிகாரிகள் ஆய்வு செய்து தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.
மக்களுக்கு குறைந்த விலையில் தரமான அரிசி கிடைக்குமா? அதிகாரிகளின் விளக்கம் என்ன? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
📲Get App