स्थानीय
குடியாத்தத்தில் பகுதி நேர ரேஷன் கடை, செல்போன் டவர் எதிர்ப்பு: நெசவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சீவூர் ஊராட்சியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கக் கோரியும், செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சிஐடியு நெசவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சீவூர் ஊராட்சியில் கள்ளூர், முருகன் நகர், குறிஞ்சி நகர், திருநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்கள் ரேஷன் பொருட்கள் வாங்க கள்ளூர் பகுதி ரேஷன் கடையையே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை பகுதி நேர ரேஷன் கடை அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று கள்ளூர் ரேஷன் கடை முன் சிஐடியு நெசவாளர் சங்கத்தினர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பகுதி நேர ரேஷன் கடை அமைத்தல், கள்ளூர் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தல், கைத்தறி நெசவாளர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை மீட்டுக் கொடுத்தல், கௌதம் பேட்டை பகுதியில் கழிவுநீர் தேங்குவதைத் தடுத்தல், முருகன் நகர் பகுதியில் பழுதடைந்த மேல்நீர் தொட்டியை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.