🔥 TRENDING Tripura Fisheries to Sell 10,117 kg Fi... Himachal Apple Crop Suffers as Delayed... Madhya Pradesh CM Mohan Yadav Declares... ઇડર પોલીસે સજા વોરન્ટમાં નાસતા ફરતા આર... વડોદરા કોર્ટમાં હાઈવોલ્ટેજ ડ્રામા: જજન... नव जीवन फाउंडेशन ने नशा मुक्ति अभियान...
17 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Crime

ரவணசமுத்திரத்தில் மாயமான சிருமி ராமநதி ஆற்றில் சடலமாக மீட்பு: சோகத்தில் அப்பகுதி மக்கள்

✍️ Reporter: Syed Anwar Sadhik 🗓 17 Oct 2026, 12:18 AM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரத்தில் மாலை முதல் காணாமல் போன பெண், இரவு ராமநதி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ரசூல் என்பவரின் மகள் ஹாஜிரா, இன்று மாலை 4:00 மணி முதல் திடீரென காணாமல் போனார்.

அவரை உறவினர்களும் உள்ளூர் மக்களும் பல இடங்களில் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இரவு சுமார் 9:00 மணியளவில் ராமநதி ஆற்றில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
📲Get App