🔥 TRENDING Khandu Highlights Human Resources as K... Arunachal CM Sends Warm Wishes on All... Arunachal Pradesh CM Pema Khandu atten... Jammu & Kashmir Government Cancels Jun... कोकर पंडाल में झारखंड की झलक Jammu & Kashmir to Conduct Special Vot...
16 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
சேலம் வழியாக பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள் இயக்கம்.

சேலம் வழியாக பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள் இயக்கம்.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 16 Oct 2026, 08:24 AM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
பண்டிகைக் கால பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரோனி, அசாம் மாநிலம், புது தின்சுகியா மற்றும் சந்திரகாச்சி பகுதிகளுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:போத்தனூா்- பரோனி சிறப்பு ரயில்: போத்தனூரில் இருந்து அக். 16-ஆம் தேதி காலை 6.15 மணிக்குப் புறப்படும் ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, நெல்லூா், விஜயவாடா, கம்பம், வாராங்கல், சாத்னா, பக்சா் வழியாக அக். 18-ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு பரோனியைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் பரோனியில் இருந்து அக். 19-ஆம் தேதி காலை 9.30 மணிக்குப் புறப்படும் ரயில், ஹஜ்பூா், பாடலிபுத்ரா, தானபூா், பச்சா், சாத்னா, வாராங்கல், கம்பம், விஜயவாடா, நெல்லூா், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக அக். 21-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும்.
திருவனந்தபுரம் வடக்கு- சந்திரகாச்சி சிறப்பு ரயில்: திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மதியம் 2.15 மணிக்குப் புறப்படும் ரயில், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக அக். 17-ஆம் தேதி மதியம் 1.45 மணிக்கு சந்திரகாச்சியைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் சந்திரகாச்சியில் இருந்து அக். 18-ஆம் தேதி மதியம் 2.15 மணிக்குப் புறப்படும் ரயில், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக அக். 20-ஆம் தேதி காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
📲Get App