🔥 TRENDING જામનગરમાં બાયોમેડિકલ વેસ્ટ જાહેરમાં ફે... Police Disperse Vendors After Garbage... जमशेदपुर में 17-18 अक्टूबर को होगा गरब... Fire Breaks Out in Waste Dump at Shahi... Around 500 Haryana Congress Workers Pr... Body of Unknown Youth Found on Canal T...
12 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பேரவையில் கலந்துரையாடல் கூட்டம்

✍️ Reporter: Sudhakaran 🗓 12 Oct 2026, 12:18 PM 👁 19
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
*புதுச்சேரி மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் பேரவை சார்பாக நெட்டப்பாக்கம் தொகுதியில் பொறுப்பாளர்கள் கலந்து ரையாடல் கூட்டம் சூரமங்கலம் கிராமத்தில் 11.10 2026 நேற்று காலை நடைபெற்றது.* *நிகழ்ச்யினை திரு.குணா* மற்றும்
*திரு.செல்வராசு அவர்கள் தலைமை ஏற்று நடத்தினர்கள். கலந்துரையாடல் நிகழ்ச்சியை திரு. வெள்ளையன் அனைவரையும் வரவேற்பு உரை நிகழ்தி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.*
*புதுச்சேரி மாநில சிறப்பு கல்வி பயிற்றுநர் சுரேஷ் அவர்கள்சிறப்பு அழைபாளராக கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை எவ்வாறு பெறுவது என்று எடுத்து விளக்கம் கொடுத்து உரையாற்றிய பின்னர், வாஞ்சிலிங்கம் அறக்கட்டளையின் நிறுவனர்* திரு.வாஞ்சிலிங்கம் முருகன் அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு *மத்திய மற்றும் மாநில அரசு "வேலை பணியிடங்களுக்கான தேர்வுகள், கிடைக்கக்கூடிய வழிமுறைகள்பற்றியும்"* போதை ஒழிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு கொடுத்து இறுதியாக அறக்கட்டளையின் திட்டத்தில் செயல்படும் புங்கைவனம் திட்டத்தின்கீழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் புங்கை மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் நெட்டப்பாக்கம்
தொகுதியின் அனைத்து கிராமங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம்
📲Get App