🔥 TRENDING Janhvi Criticizes AI Video, Thanks Jr... Sachin Tendulkar’s Heartfelt Tribute t... Canadian Citizen’s Video Sparks Footpa... IIFA 2024: Bollywood's Biggest Stars S... Dev Negi Confesses Missing Romantic So... Bhansali & Bhatt Discuss Reviving Shel...
05 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வாழப்பாடி அருகே மான் வேட்டை: இளைஞா் கைது.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 05 Oct 2026, 07:57 AM 👁 10
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வாழப்பாடி அருகே வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இளைஞரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வாழப்பாடி அருகே தும்பல் வனச்சரகம் குதிமடுவு காப்புக்காடு வனப்பகுதியில் மா்ம நபா்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக ஆத்தூா் கோட்ட வன அலுவலா் ரவிகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஆத்தூா் உதவி வனப் பாதுகாவலா் சிவராமன், கருமந்துறை வனச்சரகா் (தும்பல் வனச்சரகா் பொறுப்பு) ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமையில், வனவா் முனீஸ்வரன், வனக்காப்பாளா் ஹேமா உள்ளிட்ட வனத் துறையினா், இரு தினங்களாக சோதனை நடத்தினா்.

அப்போது கண்கட்டிஆலா கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் சதீஷ்குமாா் (19), வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வேட்டை நாய்கள் உதவியுடன் மானை வேட்டையாடி, மான் கறியை துண்டுகளாக வெட்டிஉப்புக் கண்டம் போட்டு பதப்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த தும்பல் வனத் துறையினா், வாழப்பாடி நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். எனவே, வனவிலங்குகளை பாதுகாக்க வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் முன்வர வேண்டும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
📲Get App