🔥 TRENDING સેવા જ્યોત કાર્યક્રમના અનુસંધાને આગામી... Finshots probes K‑serials' influence o... Tom Cruise’s ‘Digger’ posts sluggish D... Nani’s ‘The Paradise’ Posts Strong Day... Ajay Devgn's 'Drishyam The Conclusion'... Nurse, Two Others Injured in Thanjavur...
04 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கமுதி அருகே செயின் பறிப்பு

✍️ Reporter: Gnana Jayaguru Muthukrishnan 🗓 04 Oct 2026, 03:08 PM 👁 24
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கமுதி அருகே செயின் பறிப்பு

*கமுதி அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை அபிராமம் போலீஸார் கைது செய்து விசாரணை*


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அபிராமம் அருகே உள்ள மணிபுரம் இந்திரா நகரை சேர்ந்த மோகன் மனைவி ராஜேஸ்வரி (45) அவரது உறவினருடன் டூவீலரில் அபிராமம் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கண்ணாத்தான் அருகே இரண்டு டூவீலர்களில் அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட வழிப்பறி கும்பல் அவர்களை பின்தொடர்ந்து வந்து வழிமறித்து கத்தியால் தாக்கி அப்பெண்மணி அணிந்து இருந்த 4 1/2 சவரன் தங்க செயினை பறித்து தப்பி ஓடினர். அவ்வழியாக வந்தவர்கள் அபிராமம் போலீசாருக்கும் 108 ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். முகத்தில் ரத்த காயத்துடன் இருந்த பெண்மணி 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்த அபிராமம் போலீஸார் பெண்மணியை தாக்கி விட்டு நகையை பறித்துச் சென்ற நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட பேரையூர் இளந்தைக்குளம் சக்திவேல் (18), தூரியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (22), மேலத்தூவலை சேர்ந்த நாக முனீஸ்வரன் (26), இராமேஸ்வரம்
மாந்தோப்புவை சேர்ந்த குணா (21) மற்றும் ஒரு நபர் என 5 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

இதில் சக்திவேல், ஜெய கிருஷ்ணன், நாக முனீஸ்வரன், குணா ஆகிய நான்கு பேரை அபிராமம் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட தங்க செயினில் 3 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பேரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📲Get App