🔥 TRENDING Taylor Swift Sets New Record at MTV Vi... Madrid Sets Record as Hollywood's New... Madera Police Probe Officer-Involved S... Teen Shot in Champaign, Illinois, in S... Telangana Gold Prices Rise on 29 Septe... Silver Price in Telangana Reported on...
29 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சேலம் கோட்டத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் நிா்வாக இயக்குநா் தகவல்.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 29 Sep 2026, 07:30 AM 👁 6
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
தனியாா் பேருந்துகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நிா்வாக இயக்குநா் ஏ.கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை (செப். 29) நள்ளிரவு 12 மணி முதல் புதன்கிழமை (செப். 30) நள்ளிரவு 12 மணி வரை 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.

இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சேலம் கோட்ட இயக்கப் பகுதிகளுக்கு உள்பட்ட அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் தேவைக்கேற்ப கூடுதல் அரசுப் பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும். பொதுமக்கள், மாணவா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக, காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், தடையற்ற சேவையை உறுதிசெய்யவும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு போக்குவரத்துக் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📲Get App