🔥 ट्रेंडिंग અમદાવાદ: ગાડી ટકરાવવાની બાબતે સગીર પર... Veteran Actress Malashree Celebrates M... અમદાવાદ: ટ્રાફિક બાબતે થયેલી બબાલમાં સ... ଭୁବନେଶ୍ୱର ବିମାନବନ୍ଦରକୁ ବଡ଼ ଝଟକା; ବନ୍ଦ... ઈડરમાં આશિષ વિદ્યાલયના વિદ્યાર્થીને મા... "15 साल के किशोर का खौफनाक खेल: खुद छि...
25 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
अपराध

காவல்துறை அதிகாரியை அரிவாளால் வெட்ட முயன்ற நபர் கைது: திருநெல்வேலி மாவட்டம் பரபரப்பு

✍️ रिपोर्टर: EDWIN MICHAEL RAJ 🗓 25 सित. 2026, 11:52 AM 👁 70
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே படப்பர் குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வடக்கு விஜயநாராயணம் காவல் உதவி ஆய்வாளர் காளியப்பனை, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக்காக நிறுத்தப்பட்ட இளைஞர், திடீரென ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதவி ஆய்வாளரைத் தாக்க முயன்றார். உடனடியாக சுதாரித்த சக காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர், படப்பார் குளத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (26) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே கோயில் கொடை விழாவில் சதீஷ்குமார் என்பவரை வெட்டிய வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஆனந்தராஜை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📲Get App