🔥 TRENDING સાવરકુંડલા ગામમાં સાપ દેખાયો Uttarakhand Congress Delegation Raises... ‘Pyre’ Unveils a Love Tale Set in Utta... Bringar CEO Balachandar Meets India's... Fire erupts in Delhi’s Karol Bagh, 22... Amit Shah Leads BJP’s ‘Loktantra Bacha...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
திருப்பத்தூர் வங்கி மேலாளர் போலி கையெழுத்து மூலம் சம்மன் அனுப்பி போலீசார் தேடலில்
Crime

திருப்பத்தூர் வங்கி மேலாளர் போலி கையெழுத்து மூலம் சம்மன் அனுப்பி போலீசார் தேடலில்

✍️ Reporter: S Dinesh 🗓 21 Sep 2026, 12:08 PM 👁 81
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

திருப்பத்தூர் வட்ட நீதிமன்றத்தில் வங்கி மேலாளர் போலி கையெழுத்து போட்டு வாடிக்கையாளர்களுக்கு சம்மன் அனுப்பியதன் பின்னர், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர், செப் 20: திருப்பத்தூர் வட்ட நீதிமன்றத்தில் வங்கி மேலாளர் போலி கையெழுத்து போட்டு வாடிக்கையாளர்களுக்கு சம்மன் அனுப்பியதாக போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்ட சட் டப் பணிகள் குழு சார்பில் 14ம் தேதி திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜோலார் பேட்டை கிளை, சுந்தரம்பள்ளி, விஷமங்கலம் என 3 கிளைகளை சேர்ந்த வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

குரிசி லாப்பட்டு கிளை மேலாளர் கோதண்டன், நீதிமன்றத்தின் கையெழுத்து போலி போட்டு, வடுகமுத்தம்பட்டி கிராமத்திலுள்ள ஜோதிபாசு (35) என்பவருக்கு சம்மன் அனுப்பினார். ஜோதிபாசு அந்த கடிதத்தை காட்டி, வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்ததாக கூறினார்.

இதனை கண்ட நீதிமன்ற ஊழியர்கள் அந்த கடிதம் நீதிமன்றத்தால் அனுப்பப்படவில்லை என்றும் கையெழுத்து போலி என்றும் தெரிவித்தனர். வட்ட சட்ட பணிகள் குழு உதவியாளர் தினகரன், திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மேலாளரை தேடி வருகின்றனர்.
📲Get App