🔥 TRENDING बिसवां में अटल बिहारी वाजपेयी बस स्टॉप... હારીજ એસટી ડેપો ખાતે સ્વચ્છતા અભિયાન ક... Jharkhand JILCCE 2026 Recruitment Appl... JAC Class 10 & 12 Compartment Result 2... Jharkhand HC Names Retired Judge to Su... Kerala's Bhagyathara BT-72 Lottery Ann...
21 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ரேசன் கடைகளில் ஆதார் கைவிரல் பதிவு செய்ய சிறப்பு முகாம்

✍️ Reporter: A RAM PRABHU 🗓 17 Sep 2026, 09:23 PM 👁 101
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வருகிற 19-ந்தேதி அட்டைதாரர்கள் (E-KYC) ஆதார் கைவிரல் ரேகை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
​இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,​
வெளியூரில் வசிப்பவர்கள் ​வேலை அல்லது பிற காரணங்களால் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசித்தால் அவர்கள் தற்போது தங்கியிருக்கும் பகுதிக்கு அருகிலுள்ள ரேசன் கடைக்கே சென்று ஆதார் கைவிரல் ரேகையைப் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் வேலூர் மாவட்ட ஆட்சியர்
​லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
📲Get App