🔥 TRENDING कादिरगंज में लापता 8 वर्षीय रोशन कुमार... NREDCAP Issues Tender for O&M of Canal... Gujarat Police Uncover 500,000 Fake Gm... PM Modi, Amit Shah, Rajnath Singh Send... Gujarat Man Accused of Killing Wife an... BJP and BSP workers clash in Hoshiarpu...
16 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

தென்காசி மாவட்டத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கியதால் சுகாதார அபாயம் – அவசர நடவடிக்கை கோரிக்கை

✍️ Reporter: EDWIN MICHAEL RAJ 🗓 16 Sep 2026, 01:38 PM 👁 15
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கீழப்பாவூர் ஊராட்சி, ஆவுடையானூர் ஊராட்சி, கொண்டலூர்-ஏமனூர் தெருவில் நீண்ட நேரமாக கழிவுநீர் தேங்கியதால், கொசுக்கள் பெருகி, துர்நாற்றம் பரவுகிறது; மாவட்ட ஆட்சித்தலைவர் அவசர நடவடிக்கை உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் – கீழப்பாவூர் ஊராட்சி, ஆவுடையானூர் ஊராட்சி, கொண்டலூர்-ஏமனூர் தெருவில் சாக்கடை கழிவுநீர் கால்வாயில் நீண்ட நேரமாக கழிவுநீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேங்கியுள்ள கழிவுநீரால் கொசுக்கள் பெருகுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, ஆவுடையானூர் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, சாக்கடை கால்வாயை முழுமையாக சுத்தம் செய்து, கழிவுநீர் தடையின்றி செல்லும் வகையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக உத்தரவிட்டு, பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
📲Get App