🔥 ट्रेंडिंग ભરૂચના વોર્ડ નં. 1‑2માં શાળા, આંગણવાડી... સ્વચ્છતા श्री चारंगबाबा मित्र मंडळाचा देखावा ठर... બાપુનગર હોસ્પિટલમાં કરાર સમાપ્ત થયા બા... महाराष्ट्र FDA ने मुंबई के रेस्तरां पर... महाराष्ट्र पुलिस में 2027 में 8,100 रि...
16 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
स्थानीय

தென்காசி மாவட்ட தனி விரல் ரேகைப் பிரிவில் திருநெல்வேலி சரக டிஐஜி இரா. திருநாவுக்கரசு ஆய்வு

✍️ रिपोर्टर: EDWIN MICHAEL RAJ 🗓 16 सित. 2026, 12:54 PM 👁 17
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தனி விரல் ரேகைப் பிரிவில் திருநெல்வேலி காவல் சரக துணைத்தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தனி விரல் ரேகைப் பிரிவில் (SDFPB Unit), திருநெல்வேலி காவல் சரக துணைத்தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., இன்று (15.09.2026) மதியம் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தனி விரல் ரேகைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அங்கு முறையாகப் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் ஆய்வுக் குறிப்புகள் ஆகியவற்றை டிஐஜி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அங்கு பணியில் இருந்த காவல் அலுவலர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் முக்கிய அறிவுரைகளை அவர் வழங்கினார். இந்த ஆய்வின்போது, இரண்டு விரல் ரேகை சார்பு ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
📲Get App