🔥 ट्रेंडिंग अगरा के बुजुर्ग दम्पति ने बेटे पर घर ब... दिल्ली के पर्यटक बने हिल पर 'सदर बाज़ा... बेटे की यूपीएसपीसी इंटरव्यू से पहले पि... द ट्रिब्यून में "publicofficescams" खो... 'पैदल यात्री पर दुर्घटना' खोज से बढ़ी... उपयोगकर्ता ने द ट्रिब्यून पर 'punjabpt...
06 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
சேலத்தில் போலி ஆவணம் மூலம் ரூ. 6 கோடி நிலமோசடி: வெள்ளி வியாபாரி கைது.

சேலத்தில் போலி ஆவணம் மூலம் ரூ. 6 கோடி நிலமோசடி: வெள்ளி வியாபாரி கைது.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 06 अक्टू. 2026, 08:19 AM 👁 19
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி செய்த சேலத்தைச் சோ்ந்த வெள்ளி வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பெரம்பூா், உத்தண்டி கபிலா் தெருவைச் சோ்ந்தவா் அருண் வேல்குமாா் (52). மருத்துவரான இவா், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸில் அண்மையில் புகாா் மனு அளித்திருந்தாா்.

அதில், சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சோ்ந்த வெள்ளி வியாபாரி கங்காராமின் (70) ஏற்காட்டில் உள்ள 5,662 சதுர அடி நிலத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ. 85 லட்சத்துக்கு வாங்கினேன். பிறகு, முறைப்படி ஏற்காடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் 2014 அக். 31-ஆம் தேதி பத்திரப்பதிவு செய்திருந்தேன்.

பின்னா், தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்ற நான் 7 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் சேலம் திரும்பினேன். அப்போது, எனக்கு கிரையம் செய்து கொடுத்த நிலத்தை கங்காராம் அவரது மகன் யுவராஜ் பெயருக்கு போலியாக ஆவணங்களை தயாரித்து எழுதிவைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து கங்காராமிடம் கேட்டபோது, அவா் சரியாக பதில் அளிக்கவில்லை. தற்போது 5,662 சதுர அடி நிலத்தின் மதிப்பு ரூ. 6 கோடியாகும். எனவே, அவா்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, காவல் ஆய்வாளா் சகுந்தலா வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தியதில், நிலமோசடி செய்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மோசடி புகாரில் கங்காராமை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், போலி ஆவணம் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த யுவராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.
📲Get App