🔥 ट्रेंडिंग बिसवां में अटल बिहारी वाजपेयी बस स्टॉप... હારીજ એસટી ડેપો ખાતે સ્વચ્છતા અભિયાન ક... झारखंड JILCCE 2026 भर्ती के लिए आवेदन... JAC कक्षा 10‑12 कम्पार्टमेंट परिणाम 20... जैक्सपीसी चयन पंक्ति में जाँच के लिए र... केरल में भाग्यथारा BT-72 लॉटरी ने 1 कर...
21 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
“60% மாற்றுத்திறனாளி சான்றிதழ்... LLR இருந்தும் அரசு ஸ்கூட்டர் கிடைக்கவில்லை!”

“60% மாற்றுத்திறனாளி சான்றிதழ்... LLR இருந்தும் அரசு ஸ்கூட்டர் கிடைக்கவில்லை!”

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 10 सित. 2026, 11:34 PM 👁 84
यहाँ देखें: ▶️ YouTube 📘 Facebook 📷 Instagram
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
“மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்காக தமிழக அரசு வழங்கும் உதவி உபகரணங்களில் ஒன்றான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்காக, கோவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.
இவரிடம் 60 சதவீத Locomotor Disability கொண்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளது. மேலும் LLR-ம் பெற்றுள்ளார்.
22-04-2025 அன்று தமிழ்நாடு e-Sevai மையம் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு விண்ணப்பம் செய்துள்ளார். மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை ‘Application Submitted to AWO’ என்ற நிலையிலேயே இருப்பதாக ஆவணம் காட்டுகிறது.
அரசு விதிமுறைகளின்படி இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இந்தத் திட்டத்தில் தகுதி பெற முடியும்.
அப்படியிருக்க, இந்த விண்ணப்பம் ஏன் இன்னும் முடிவு செய்யப்படவில்லை?
தகுதி இல்லை என்றால் அதற்கான காரணம் என்ன?
தகுதி இருந்தும் தேர்வு செய்யப்படவில்லையெனில், தேர்வு செய்யப்படாததற்கான காரணத்தை அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவரின் கோரிக்கை.
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டம்... தகுதியானவரை சென்றடைகிறதா?
இதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.”
📲Get App