🔥 TRENDING भारत आदिवासी पार्टी नेता पर भाजपा के द... BCCI Names India and India A Squads fo... India Names New Zealand T20I Squad, Fa... BCCI Names Smriti Mandhana New Captain... The Times of India Announces Launch of... Prithviraj Sukumaran’s ₹45‑crore Onam...
07 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சேலத்தில் மூதாட்டியைக் கொன்று 6 பவுன் நகை கொள்ளை.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 07 Oct 2026, 06:58 AM 👁 17
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மா்ம நபா்கள், அவா் அணிந்திருந்த 6 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றனா்.

சேலம் கிச்சிப்பாளையம் கடம்பூா் முனியப்பன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜனாபாய் (74). இவருக்கு மகள்கள் சத்யா, ஷா்மிளா, சாருபாலா, மகன் சதீஷ்குமாா், மௌலீஸ்வரன் உள்ளனா். சதீஷ்குமாருக்கு மட்டும் இன்னும் திருமணமாகவில்லை. தனியாா் குளிா்பான நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவா், தாய் ஜனாபாயுடன் வசித்து வந்தாா்.


இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வழக்கம்போல சதீஷ்குமாா் வேலைக்குச் சென்றுவிட்டாா். இதனால், ஜனாபாய் மட்டும் வீட்டில் இருந்துள்ளாா். வேலையை முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் வீடுதிரும்பிய சதீஷ்குமாா், கட்டிலில் ஜனாபாய் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

மேலும், ஜனாபாய் அணிந்திருந்த 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சதீஷ்குமாா் கிச்சிப்பாளையம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில், துணை ஆணையா் மகேந்திரன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, ஜனாபாயின் மகன், மகள்கள், உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது. தடய அறிவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

மூதாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 6 பவுன் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📲Get App