காந்தி ஜெயந்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு300 சிறப்பு பஸ்கள்.
சேலம்: காந்தி ஜெயந்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், இன்று முதல், வரும், 5 வரை, 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்-படி சேலம், பெங்களூரு, சென்னை, கிளாம்பாக்கம், ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் ஸ்டாண்-டுகளில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படு-கின்றன.போக்குவரத்துக்கழக முன்பதிவு மையம், இணைய-தளம், செயலி வழியே, பயணியர் முன்பதிவு செய்து பயணிக்-கலாம்.அதேபோல் புரட்டாசி, 3வது சனியை முன்னிட்டு, நாளை, ஓமலுார் அருகே உள்ள காருவள்ளி சின்னதிருப்பதி; ராசிபுரம் மின்னாம்பள்ளி, நைனாமலை; சங்ககிரி ஒருக்காமலை, இறைய-மங்கலம், பெருமாமலை ஆகிய கோவில்களுக்கு பக்தர்களின் தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.