🔥 TRENDING Massive Fire Breaks Out at Chemical Wa... Cyclone Akvan Looms Over Delhi: Will I... Cyclone Akvan: What It Is and Why It M... Congress and INDIA Bloc Commit to Stro... Rajat Patidar's unbeaten 135 powers Ma... Sikkim's First Food Exports Reach US a...
16 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

விருதுநகர்: திருச்சுழி அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழு - 30 மாணவர்கள் உயிர் தப்பினர்

✍️ Reporter: Siva 🗓 16 Nov 2026, 04:20 PM 👁 30
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காரேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காரேந்தல் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை பெரும் விபத்து ஒன்று நிகழ்ந்தது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் இந்தப் பள்ளியின் வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் வளாகத்தில் காலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வகுப்பறையின் உள்பகுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால், அப்பகுதி தூசியும் புகையும் சூழ்ந்தது. இதனைக்கண்ட ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை மீட்டு பாதுகாப்பான வேறு வகுப்பறைகளுக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த மாணவருக்கும் காயம் ஏற்படவில்லை.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழைய கட்டிடத்தில், ஏற்கனவே மழைநீர் உள்ளே புகுந்து பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து மோசமான நிலையில் இருந்தது. இருப்பினும், மாணவர்கள் இப்போதும் அதே சேதமடைந்த கட்டிடத்திலேயே கல்வி பயின்று வருகின்றனர்.

எனவே, விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காக, சேதமடைந்த பழைய கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு, புதிய வகுப்பறை கட்டிடத்தை கட்டித் தருமாறு மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📲Get App