🔥 TRENDING Manjhanpur સાબરકાંઠા: લાંબડીયા ગામે સસ્તા અનાજની... Jammu & Kashmir Govt Orders Transfers... Sawant Calls on Citizens to Embrace Ga... FTAs Open New Global Markets for Goa’s... Congress AICC General Secretary accuse...
02 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

யானை தந்தங்கள் விற்க முயற்சி 3 பேர் கைது

✍️ Reporter: A RAM PRABHU 🗓 02 Oct 2026, 03:27 PM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செதுக்கரைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தி விற்க முயன்ற 2 யானைத் தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
​கே.வி. குப்பம் அடுத்துள்ள பனமடங்கி கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் 39, அனைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூரை அடுத்த பாக்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி 49, ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தராஜ் 37 ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த கடத்தல் குறித்து ரகசிய தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் உத்தரவின் பேரில் குடியாத்தம் வன அலுவலர் தலைமையில் வன துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்களுடன் கைது செய்யப்பட்ட 3 நபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📲Get App