Local
சென்னை அருகே அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி விபத்து: 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
Watch on:
▶️ YouTube
சென்னை அடுத்த காத்தாங்குளத்தூர் பகுதியில் ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான ஜெகதீஸ்வரியின் கார் மோதியதில், டியோ இருசக்கர வாகனத்தில் சென்ற 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை அடுத்த காத்தாங்குளத்தூர் பகுதியில் ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான ஜெகதீஸ்வரியின் கார் மோதி விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞர் இறையன்பு (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது டியோ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அமைச்சரின் கார் மோதியதில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த இறையன்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், விபத்துக்குள்ளான அமைச்சரின் சொந்த காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.