🔥 TRENDING Gas Cylinder Explosion in Bengaluru: V... Amritsar Police Arrest 7 in Taran Wala... Police Crack Bhubaneswar Murder Plot A... Woman Arrested in Thiruvananthapuram f... Malayalam Film 'Ottam Thullal' Set for... Unisba Media Reveals Top 7 Thriller Se...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
கோவை மாநகரில் 118வது பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் கழக வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம்
Politics

கோவை மாநகரில் 118வது பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் கழக வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம்

✍️ Reporter: Musthafa Hussain 🗓 09 Sep 2026, 12:32 PM 👁 98
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, கோவை அதிமுக தலைமையகத்தில் 118வது பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, 118வது பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டம் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் K.அர்ச்சுணன் (Ex. MLA) அவர்களின் தலைமையிலும், முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர், MGR இளைஞர் அணி மாவட்ட செயலாளர் K.R.ஜெயராம் (Ex. MLA) அவர்களின் முன்னிலையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழகச் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கலந்து கொண்டு, கழகத்தின் வளர்ச்சி திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை, பிரச்சார நடவடிக்கைகள் ஆகியவற்றை விவாதித்து, அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒப்புதல் பெற்றனர்.

கூட்டத்தின் முடிவில், கழகத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில், புதிய திட்டங்கள் மற்றும் செயல்முறைகளை அமல்படுத்தும் உறுதி தெரிவித்தனர், மேலும் 118வது பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை நினைவுகூரும் பல்வேறு நிகழ்ச்சிகளை திட்டமிடுவதாக அறிவித்தனர்.
📲Get App