🔥 ट्रेंडिंग মলয় মহাজনকে সরিয়ে বহরমপুর সাংগঠনিক জ... हिमाचल प्रदेश ने खोला पहला गधों का फार... इंदौर के मनोरमागंज में सॉफ्टवेयर इंजीन... बड़वानी के सेंधवा में भाजपा नेता के बे... धायसर में मोहन सिंह भाटी ने 167 वोटों... ದೇವದುರ್ಗ ಜೆಡಿಎಸ್‌ಗೆ ಬಲ ತುಂಬಿದ ಮಾಜಿ ತಾಪ...
16 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

நாகை துறைமுகத்தில் 1ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

✍️ रिपोर्टर: MAHENDRAN M 🗓 16 नव. 2026, 11:07 PM 👁 22
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 17-ம் தேதி தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு; நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்



​தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 860 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
​இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை புயலாகவும், நாளை மறுநாள் நவம்பர் 17 மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
​இதன் காரணமாக, நாகப்பட்டினம், சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
📲Get App