🔥 ट्रेंडिंग गति से चलती गाड़ी ने अनूपूर, MP में सै... एलेस ह्वांग को चीनी जासूसी एजेंसी से ज... मध्य प्रदेश अस्पताल के ICU में वार्ड ब... एनआईए ने माल्दा में न्यायिक अधिकारियों... किसान तुहर टोकन ऐप से धान विक्रय में म... अशोक लेयलैंड के साथ सिंगुर में उद्योग...
23 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பெண்கள் – தமிழக அரசின் ஆடு, மாடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வம்!

✍️ रिपोर्टर: MANIKANDAN 🗓 23 नव. 2026, 01:11 PM 👁 31
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பெண்கள் – தமிழக அரசின் ஆடு, மாடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வம்!



தமிழக அரசு சார்பில் ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்ற தகவல் பரவியதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர்.

கிருஷ்ணகிரி, ஓசூர், அஞ்செட்டி, கெலமங்கலம், வேப்பனப்பள்ளி, தளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிராமப்புற பெண்கள் அதிக அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அரசின் ஆடு, மாடு வழங்கும் திட்டத்தின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், பெண்கள் விண்ணப்ப மனுக்களை அளிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. காலை முதலே கிராமப்புறங்களில் இருந்து பெண்கள் குழு குழுவாக வந்து மனு அளிக்க குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதில் கிராமப்புற பெண்கள் காட்டும் ஆர்வத்தை இந்தக் கூட்டம் வெளிப்படுத்தியது.
📲Get App