🔥 TRENDING ઉજ્જૈનમાં વૈકુંઠ ચતુર્દશી પર હરિ-હર મિ... લીલીયા રેલ્વે સ્ટેશન ના વિકાસ કાર્યોના... મહેસાણા એરપોર્ટમાં 'વંદે માતરમ' 150મી... वारंटियों के खिलाफ शाहबाद पुलिस का अभि... નેપાળના PM બાલેન્દ્ર શાહની ભારત મુલાકા... జిల్లా పంచాయతీ ఉద్యోగులకు పోస్టల్ బ్యా...
23 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

முத்துப்பேட்டை அருகே தன்னார்வலர்களுக்கு ரெட்கிராஸ் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

✍️ Reporter: MAHENDRAN M 🗓 23 Nov 2026, 08:49 PM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
முத்துப்பேட்டை அருகே தன்னார்வலர்களுக்கு ரெட்கிராஸ் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி



திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், திருவாரூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரக் கிளை சார்பில் தன்னார்வலர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை வட்டாரத் தலைவரும், வட்டாட்சியருமான பிரேமா தலைமை வகித்தார். வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ராகுல், முத்துப்பேட்டை கிளைத் தலைவர் செல்லப்பா, மாவட்ட கிளை இணைச் செயலாளர் செந்தில்குமார், இளையோர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜீ பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.மாநில பேரிடர் மேலாண்மை பயிற்றுநர் பெஞ்சமின், முதலுதவி சிகிச்சை முறைகள், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அவசர காலங்களில் கூடாரம் அமைக்கும் முறைகள் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, முத்துப்பேட்டை தீயணைப்புத் துறையினர் பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பது, நீரில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது உள்ளிட்ட பல்வேறு மீட்புப் பணிகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.
குறிப்பாக, ஜாம்புவானோடை அண்ணாசிலை பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்ட பேரிடர் மீட்புப் பணிகள் குறித்து தன்னார்வலர்களுக்கு நேரடி செய்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அருணாசலம், லதா பாலமுருகன், துணைத்தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட கிளை துணைத்தலைவர் கே.வி. கண்ணன் வரவேற்றார். முத்துப்பேட்டை கிளைப் பொருளாளர் செல்வசிதம்பரம் நன்றி கூறினார்.
பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு விரைந்து உதவிடும் வகையில் நடைபெற்ற இப்பயிற்சியில் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
📲Get App