காரைக்குடி தேனாற்று பகுதியில் அமைச்சர் ஆய்வு.
கடந்த ஓராண்டு காலமாக காரைக்குடி பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் தேனாற்றில் கலப்பதாக புகார் எழுந்தது.
காரைக்குடி வழியாக பாயும் பழமை வாய்ந்த தேனாற்றில் கழிவு நீர் கலப்பதாக எழுந்த புகாரையடுத்து இன்று கனிமவளத்துரை அமைச்சர் டி. கே. பிரபு அவர்கள் லாவடியேந்தல் கிராம் அருகே உள்ள அணைக்கட்டு பகுதியை பார்வையிட்டார். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.