திருவாரூர் ஆட்சியரக கூட்டரங்கில் தமிழக நூலக ஆணைக்குழு தலைவர் ஜோதிமணி தலைமையில் ஆய்வு கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை செயலாக்க நூலகக்குழு ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலக நூலக ஆணைக்குழு தலைவர் / காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் லெ.இ.ஜோதிமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்வி.சதீஸ்குமார்,, சட்டமன்ற பேரவை நூலகக்குழு உறுப்பினர்கள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மு.வீ.கருப்பையா , சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மரு.க.கபில் , திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் (எ) நவல்பட்டு எஸ்.விஜி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்புச் செயலாளர் ர.கற்பகம் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பா.கலைவாணி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்