🔥 TRENDING उजियारा अभियान में गांजा तस्करी पर कोर... રાજ્યપાલ શ્રી આચાર્ય દેવવ્રતજી રાજુલામ... IPL 2027 ರಿಟೆನ್ಷನ್ ಪಟ್ಟಿ ಪ್ರಕಟ: ಗೋವಾದಲ... माननीय राजा भैया ने कुंडा में आयोजित क... ಸೈಯದ್ ಮುಷ್ತಾಕ್ ಅಲಿ ಟ್ರೋಫಿ 3ನೇ ಸುತ್ತಿನ... Haryana orders land acquisition for So...
18 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

எட்டுக்குடியில் வள்ளியை துரத்திய யானை:தத்ரூவமாக அரங்கேறிய வள்ளி-முருகபெருமான் திருக்கல்யாணம்

✍️ Reporter: MAHENDRAN M 🗓 18 Nov 2026, 09:46 AM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
முருகப்பெருமானின் ஆதிபடை வீடாகப் போற்றப்படும் நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள புகழ்பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த நவம்பர் 9ஆம் தேதி துவங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் இரவு பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.இதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், வள்ளியை யானை துரத்துவது போன்ற தத்ரூபமான காட்சி அரங்கேற்றப்பட்டது. வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பிய முருகப்பெருமான், வேடன் திருக்கோலத்தில் வந்து வள்ளியிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும், அப்போது விநாயகப் பெருமான் யானை வடிவில் தோன்றி வள்ளியை அச்சுறுத்தியதாகவும் புராண வரலாறு கூறுகிறது.யானைய கண்டு அச்சமடைந்த வள்ளி, வேடன் வடிவில் இருந்த முருகப்பெருமானை அடைக்கலமாகப் பற்றிக் கொள்ளும் நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் யானை வள்ளியைத் துரத்துவதும், அதிலிருந்து தப்பிக்க வள்ளி ஓடுவதும் என புராண நிகழ்வை நேரில் காண்பது போன்ற தத்ரூபமான காட்சி பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்திற்காக, வள்ளி, சமேதராக முருகப்பெருமான்
மணக்கோலத்தில் எழுந்தருளிய மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. மந்திரங்கள் முழங்கவும், மங்கள வாத்தியங்கள் இசைக்கவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.திருக்கல்யாணத்தின் முக்கிய நிகழ்வான மாங்கல்ய தாரணம் எனப்படும் மங்களகரமான தருணத்தில், வள்ளி நாயகிக்கு முருகப்பெருமான் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
📲Get App