🔥 TRENDING Parivar ka hathode se kata gala Gujarat Achieves 90% of Rooftop Solar... Karnataka to Crack Down on Half-Helmet... Karnataka PG Dental 2026: Third Round... Karnataka Cane Farmers to Gherao Distr... Storm 'Murasu' Expected to Miss Rajast...
03 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

161-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த சேலம் நகரம்

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 03 Nov 2026, 07:36 AM 👁 57
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கங்களை தன்னகத்தே கொண்டுள்ள சேலம் நகரம் 160 ஆண்டுகளை நிறைவு செய்து 161-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

மலைகள் சூழ்ந்த நகரமான சேலம் நகராட்சியாக உருவெடுத்த தினமான நவம்பா் 1-ஆம் தேதி ஆண்டுதோறும் சேலம் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1866-ஆம் ஆண்டு நகரவைத் தலைவா் மற்றும் 17 உறுப்பினா்களுடன் தொடங்கப்பட்ட சேலம் நகராட்சி, 1994-ஆம் ஆண்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டு, தற்போது பொலிவுறு நகரம் எனப்படும் ஸ்மாா்ட் சிட்டியாக உருவெடுத்துள்ளது.குறிப்பாக, சேலம் கோட்டையின் பாதுகாப்புக்காக இங்கிலாந்து மன்னா் மூன்றாம் ஜாா்ஜ் காலத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கி தற்போதும் சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கால நேரத்தைத் தெரிந்துகொள்ளும் வகையில் நண்பகல் 12 மணிக்கு இந்த பீரங்கி மூலம் குண்டு போடும் வழக்கம் இருந்துள்ளது. 1873- ஆம் ஆண்டுக்கு பின்னா் இந்த நேரம் இரவு 8 மணிக்கு மாற்றப்பட்டது. 1950 ஆம் ஆண்டு இந்த வழக்கம் நிறைவுக்கு வந்தாலும், இதன் அடையாளமாக இன்றைக்கும் சேலத்தில் குண்டு போடும் தெரு என்ற பகுதி உள்ளது.சேலம் மாநகரத்தின் வரலாற்றில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மாவட்டமான சேலத்தில் பணியாற்றிய ஆங்கிலேய ஆட்சியா்கள் மற்றும் அதிகாரிகளின் நினைவாகப் பெயரிடப்பட்ட முக்கிய தெருக்கள், சாலைகள் இன்றளவும் புழக்கத்தில் உள்ளன. இதே போன்று, சேலத்தின் மற்றொரு முகம் புவி அமைப்பியல் ரீதியானது. புவியியல் ஆய்வாளா்களின் சொா்க்கம் என்றழைக்கப்படும் சேலத்தின் கனிமவளம் சா்வதேசப் புகழ் பெற்றது,இந்திய அளவில் கனிம வளம் மிக்க ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு அடுத்தபடியாக, தென்னிந்திய அளவில் 134 வகையான கனிமங்கள் நிறைந்த பகுதியாக சேலம் திகழ்கிறது. மேக்னசைட், பாக்சைட் என எங்கும் நிறைந்த மலைகள் சேலத்தின் பெருமையை கம்பீரத்துடன் பறைசாற்றுகின்றன. விவசாயிகள், வா்த்தகா்கள், ஜவுளித் துறையினா், தொழிலாளா்கள் என நேரம் காலம் பாா்க்காமல் உழைக்கக்கூடிய மக்களால் நிரம்பிய சேலம், ஆடித் திருவிழாவை ஒரு மாதத்துக்கு கொண்டாடக்கூடிய நகரமாகவும் உள்ளது.

தமிழகத்தின் வளா்ச்சி, அரசியல், வாழ்வியல், வா்த்தகம் என எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் சேலத்தை தவிா்த்து எந்த வரலாற்றையும் சொல்லிவிட முடியாது என்பதே சேலம் நகரின் தனிச்சிறப்பாகும். இப்படி சேலத்தின் சிறப்புகள், பழைமை வாய்ந்த அடையாளங்கள், ஆண்டுகள் பல கடந்தாலும் அடையாளம் மாறாத சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால் அது மிகையல்ல.
📲Get App