🔥 TRENDING चुनाव पर्यवेक्षक प्रह्लाद सहाय नागा ने... దామనపల్లిలో ఓటు హక్కు వినియోగించుకున్న... बलिया: जमीन विवाद में घायल बुजुर्ग की... મુઝફ્ફરનગરની આંતરરાષ્ટ્રીય કબડ્ડી ખેલા... बालोतरा के जेरला में अज्ञात बुजुर्ग का... திருச்சுழி தீயணைப்பு நிலையம், சித்தலக்...
05 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தீபாவளி திருநாளில் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தும் ஏர் கூல் VKT நிறுவன உரிமையாளர் கண்ணன்!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 05 Nov 2026, 05:12 PM 👁 24
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தீபாவளி திருநாளில் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தும் ஏர் கூல் VKT நிறுவன உரிமையாளர் கண்ணன்!

ஏர் கூல் VKT ரெஜிஸ்ட்ரேஷன் சர்வீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணன் அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளை முன்னிட்டு தனது சக பணியாளர்களுக்குத் தேவையான பணிக்கருவிகள் (Tools), பேக், இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறார்.
தன்னுடன் இணைந்து பணியாற்றும் பணியாளர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் மதிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்தப் பரிசுகளை வழங்கி வருவது அனைவரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் அவரது நண்பர் விஜயகுமார் அவர்கள் தனது கைகளால் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் தங்கராஜ் மற்றும் கவின் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பணியாளர்களைத் தனது குடும்ப உறுப்பினர்களாகக் கருதி அவர்களுக்கு ஆதரவளிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கும் தொடர்ந்து சிறப்பான சேவையையும் ஆதரவையும் வழங்கி வருகிறார் கண்ணன்.
தொழில் வளர்ச்சியுடன் பணியாளர்களின் மகிழ்ச்சியையும் நலனையும் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் தீபாவளிப் பரிசுகள் வழங்கி வரும் கண்ணனின் இந்த முயற்சி சக பணியாளர்கள் மத்தியில் உற்சாகத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தியுள்ளது.
📲Get App