🔥 TRENDING BCCI Defends Siraj’s Omission from Pla... Poisoned liquor victim Rakesh dies in... Congress burns dummy of Chief Election... ನ.28ರಂದು ಬಂಡೋಳಿಯಲ್ಲಿ ವಾಲ್ಮೀಕಿ ಗುರುಪೀಠದ... मंगलौर में मुख्यमंत्री पुष्कर सिंह धाम... ರಾಮದುರ್ಗ ಗ್ರಾ.ಪಂ. ವ್ಯಾಪ್ತಿಯ ಗ್ರಾಮಗಳನ್ನ...
25 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டு

✍️ Reporter: Sudhakaran 🗓 25 Nov 2026, 07:09 PM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

டெங்கு தடுப்பு நடவடிக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

*டெங்கு உயிரிழப்புகள் அதிகரிப்பு: சுகாதாரத்துறை அலட்சியமே காரணம்*

**கூடுதல் மருத்துவர்கள், உயிர்காக்கும் மருந்துகளை கையிருப்பில் வைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்**

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவல் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் அ.மு. சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவுவதாக ஆட்சியாளர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தினாலும், டெங்கு பரவலைத் தடுக்க சாக்கடை வாய்க்கால்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த 2 மாதங்களாக டெங்கு பாதிப்பு நீடித்து வரும் நிலையில், ரத்தத் தட்டணுக்கள் குறைவதால் நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதற்குத் தேவையான மருந்துகள் போதுமான அளவில் சுகாதாரத்துறையிடம் இல்லை. டெங்குவால் உயிரிழந்தவர்களில் இளம் வயதினரும் உள்ளனர்.

பிச்சவீரன்பேட்டையைச் சேர்ந்த ஹரிணி காய்ச்சலுக்காக ஏற்கனவே கதிர்காமம் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோதே டெங்கு பாதிப்பைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்திருந்தால் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்துகளைப் போதுமான அளவில் கையிருப்பில் வைத்து, டெங்கு நோயாளிகளுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். சுகாதாரத்துறையை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
📲Get App