நாகை ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் வ.பவணந்தி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோ.அரங்கநாதன் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ர.ராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.