காரைக்குடி புறநகர் பகுதியில் பாலம் அமைக்க கோரிக்கை.
காரைக்குடி செஞ்சை - சங்கன்திடல் சாலையின் நடுவே தேனாறு உள்ளது. எனவே பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
காரைக்குடி மாநகராட்சியின் பழமையான பகுதியாக செஞ்சை மற்றும் சங்கன்திடல் உள்ளது. இந்நிலையில் செஞ்சை சங்கன்திடல் சாலையின் நடுவே தேனாறு உள்ளது. மழைக்காலங்களில் தேனாற்றில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் இவ்வழியை பயன்படுத்த முடியாமல் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. எனவே இப்பாதையில் பாலம் அமைத்து தர இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.