🔥 ट्रेंडिंग दमन ने एआईएफएफ चुनावों के लिए चाबे को... सॉफ़ में भारत की टाइटल रक्षा पर पाकिस्... पणजी की गतिशीलता योजना ठहर गई, सड़कों... टिग्री गंगा जी मेले 2026 का आज रात उद्... एनपीपी ने नागालैंड के राज्यपाल से वन्य... केंद्र ने नागालैंड के पर्यटकों के लिए...
18 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வேலூர் மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு!

✍️ रिपोर्टर: A RAM PRABHU 🗓 17 नव. 2026, 11:54 PM 👁 33
यहाँ देखें: ▶️ YouTube 📘 Facebook 📷 Instagram
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்டம் மாநகராட்சி பகுதி அண்ணாசாலை பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பி எஸ் லீலா அலெக்ஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் செயல்பாடுகள், பணியாளர்களின் விவரங்கள் மற்றும் திட்டச் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், அவர்களைப் பராமரிக்கும் முறைகள் குறித்தும் அலுவலர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயா உள்பட பலர் இருந்தனர்.

இதேபோல, வேலூர் ஊராட்சி ஒன்றியம், அத்தியூர் ஊராட்சி, குருமலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்ததுடன், உணவின் தரம் மற்றும் அதன் சுவை குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரேமலதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, அணைக்கட்டு வட்டாட்சியர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
📲Get App