🔥 TRENDING PM Modi Reviews Key Projects at Lok Bh... Amul Hikes Curd and Lassi Prices: 1kg... 260 Students Participate in Drug-Free... Railway Minister Vaishnaw Launches New... रामस्वरूप लोधी हत्याकांड के बाद प्रशास... Mangalore Central Railway Station to R...
14 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

திருப்பூண்டியில் சிபிஐ மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அனுப்பும் போராட்டம்

✍️ Reporter: MAHENDRAN M 🗓 14 Nov 2026, 06:29 PM 👁 25
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி தபால் நிலையம் முன்பாக உச்ச நீதிமன்றத்திற்கு தபால் அனுப்பும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கம் கீழையூர் ஒன்றிய குழு சார்பில் நடைப்பெற்றது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசாங்கம் மேகத்தாட்டு அருகில் அணைக்கட்டு முயற்சிப்பதை நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரியில் குறுக்கே அணைக்கட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் எம். ஹாஜா அலாவுதீன் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் என்.முருகையன் தலைமை வகித்தனர். இப்போராட்ட நோக்கங்களை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில குழு உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் பேசினார்.இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.காந்தி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வி. சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் டி.கண்ணையன், டி சந்திரகாசன்,தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் எஸ். பக்கிரிசாமி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய செயலாளர் ஏ எஸ்.பகவத்சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூண்டி கிளை செயலாளர் இளையராஜா, பெரிய தும்பூர் கிளை செயலாளர் அறிவழகன், வாழக்கரை கிளை செயலாளர் தினேஷ், காமேஸ்வரம் கிளை செயலாளர் கவியரசன், சிந்தாமணி கிளை செயலாளர், சபாபதி கீழப்பிடாகை கிளை செயலாளர் ஞானசம்பந்தம், ஈசனூர் கிளை செயலாளர் பீட்டர்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ் ராஜு, திருக்குவளை ஆறுமுகம், சோழ வித்யாபுரம் ஆறுமுகம், திருப்பூண்டி கிராம சங்கத் தலைவர் பாப்பையன், பெரியதும்பூர் கிராம சங்கர் செயலாளர் ஜி. அன்பழகன்,விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினர் கே. தவமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தபால்கள் அனுப்பினர். கோரிக்கைகள்
காவிரியில் குறுக்கே கர்நாடக அரசு மேகதாட்டு அணை கட்டுவதை உச்ச நீதிமன்றம் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்
காவேரி டெல்டா மாவட்டத்தில் தற்பொழுது சம்பா தாளடி நெற்பயிர்கள் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்தப் பயிர்களை பாதுகாத்திட இன்சூரன்ஸ் மிகவும் முக்கியமானதாகும் ஆனால் குத்தகை சாகுபடி விவசாயிகள் கோயில் நிலம் மடத்தின் நிலத்தை சாகுபடி செய்கின்ற விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஏற்பாடு செய்திட வேண்டும்,மேலும் சாகுபடி விவசாயிகள் வேளாண்மை தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலமாக கூட்டுறவு கடன் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.
📲Get App