स्थानीय
கீழ்க்குடி கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய கல் வட்டங்கள், இரும்பு உலை தடயங்கள்: தொல்லியல் கண்டுபிடிப்பு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கீழ்க்குடி கிராமத்தில் பெருங்கற்காலம் முதல் 15–16 ஆம் நூற்றாண்டு வரை பல கால கட்டங்களை சேர்ந்த கல் வட்டங்கள், கற்குவியல்கள், இரும்பு உலை தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கீழ்க்குடி கிராமத்தில் தொல்லியல் துறை மாணவர் சுரேஷ் குருசாமி தலைமையில் பெருங்கற்காலம் மற்றும் சங்க காலத்தை சேர்ந்த கல் வட்டங்கள், கற்குவியல்கள், முதுமக்கள் தாழியின் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சான்றுகள் அக்கால மக்களின் வாழ்வியல், இறந்தவர்களை அடக்கம் செய்யும் ஈமச்சடங்கு மரபுகளை அறிய உதவுகின்றன. மேலும், இரும்பு உருக்கு உலைகளின் தடயங்கள், கசடுகள், எச்சங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.
15–16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் மற்றும் 5 சதிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன, இது சங்க காலத்தின் வீர மரபு, நினைவு வழிபாடுகள் மற்றும் பெண்களின் வரலாற்றை வெளிப்படுத்தும் பொக்கிஷ சான்றுகளாக கருதப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்புகள் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர்களின் மேற்பார்வையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல் துறையினர் விரைந்து அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு மேலும் பல தடயங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.