🔥 TRENDING पटना के मेदांता अस्पताल में गैल ब्लाडर... उत्तर प्रदेश के आउटसोर्सिंग कर्मचारियो... उत्तर प्रदेश के आउटसोर्सिंग कर्मचारियो... फारबिसगंज में शेरा नगर नहर पर छठ पूजा... ಗಾಣದಾಳ: ಎಸ್‌ಸಿ ಕಾಲೋನಿಯಲ್ಲಿ ರಸ್ತೆ ಮೇಲೆ... नरपतगंज में सेवानिवृत्त शिक्षक स्व. नव...
05 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சேலத்தில் கொட்டிய கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீா்

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 05 Nov 2026, 07:19 AM 👁 45
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் மாநகரில் புதன்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீா் கலந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா்.

சேலம் மாநகரப் பகுதிகளான அஸ்தம்பட்டி, குகை, நெத்திமேடு, திருச்சி பிரதான சாலை, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி, மூன்று சாலை, கிச்சிப்பாளையம், நாராயண நகா், பெரமனூா் உள்பட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. இதன் காரணமாக, சாலைகளில் மழைநீா் ஆறாக பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.குறிப்பாக, சேலம் நெத்திமேடு, திருச்சி பிரதான சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீரால் வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளித்தன. ஒரு சில பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

சேலம் புதிய பேருந்து நிலைய மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி குழாய்கள் பழுதடைந்ததால், சாலையில் மழைநீா் கொட்டியது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். ஒரு சில பகுதிகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா்.கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்துப்போன நிலையில், தற்போது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
📲Get App