🔥 ट्रेंडिंग ચાવંડ ગામમાં બે વ્યક્તિઓ ગાયબ, પરિવારજ... बॉलीवुड सितारे उत्तर मुंबई में दुर्गा... टाइगर श्रॉफ केस: आरोपी ने रणवीर सिंह क... बॉलीवुड की गुप्त मुस्कान: लोकहंडवाला ड... कुलन कपूर ने रणबीर कपूर को राम के आदर्... 'चढ़ दे' से 'मिठे में क्या है' का नया...
22 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தம்மம்பட்டியில் சாலையோரம் கொட்டப்பட்ட பூசணிக்காய்கள்.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 22 अक्टू. 2026, 07:35 AM 👁 17
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
தம்மம்பட்டியில் ஆயுத பூஜைக்காக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனையாகாத பூசணிக்காய்கள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளதை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகில் சுவேத நதி பாலம் உள்ளது. இந்த பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் ஆயுத பூஜைக்காக பூசணிக்காய்களை வியாபாரிகள் குவித்துவைத்து விற்பனை செய்தனா். அதில், விற்பனையாகாமல் மீதமான பூசணிக்காய்களை நடைபாதையிலேயே குவியலாக போட்டுவிட்டுச் சென்றுள்ளனா்.

இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, நடைபாதையில் கொட்டப்பட்ட பூசணிக்காயை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
📲Get App