🔥 ट्रेंडिंग जेलर 2 ने उत्तरी भारत में मूल भाषा में... अवेंजर्स: डूम्सडे 17 दिसंबर को जल्दी र... रौहिनी आराने तारा गाथी का आधिकारिक ट्र... पीटीसी इंडिया ने नेतृत्व पुनर्गठन के ब... ब्लूमबर्ग रणनीतिकार चेतावनी: बिटकॉइन क... थ्रिसूर के बेकरी मालिक ने हरीत वाइन ला...
19 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வேலூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

✍️ रिपोर्टर: A RAM PRABHU 🗓 19 अक्टू. 2026, 01:07 AM 👁 21
यहाँ देखें: 📘 Facebook
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த பதினைந்தாம் தேதி முதல் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களில் இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்
அலுவலகம் தொலைபேசி எண்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
1077, 0416 2258016
வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் 0416 2220519
அனைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகம் 0416 2276443
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் 0416 2297647
கே வி குப்பம் வட்டாட்சியர் அலுவலகம், 0416 2997219
குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம், 04171 221177
பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம், 04171 292748
மழையால் வீடுகள் சேதமடைதல், கால்நடைகள் பாதிக்கப்படுதல், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுதல் மற்றும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாகக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
📲Get App